வேல் வகுப்பு

சுருக்கவுரை
பொழிப்புரை

தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தான

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும்

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும்

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும்

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும்

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர்துணை யாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு மறத்தைநிலை காணும்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும்

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும்

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும்

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும்

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

சுருக்கவுரை

முருகனுக்கு உகந்த நாயகி

வள்ளியுடன் பொழுது போக்கும் முருகன் யாரெனில் – கூறுகேன் :-
அவன்

  1. பத்தி வழியே முத்தியாம் என ஒழுகும் பக்தர்களின் மீது அன்பு கொள்பவன்
  2. தமையனாம் கணபதியுடன் பழத்துக்காகப் போட்டியிட்டவன்
  3. வேத ஆகமங்களுக்குக் காரணபூதனாய் நின்று உலகை ஒரு நொடியில் சுற்றி வந்தவன்
  4. ஆணவத்தை அடக்கி அநுபூதியை அளித்தவன்
  5. தேவர் உலகைப் பிழைக்க வைத்து, அவர்கள் ஊரைக் காப்பாற்றியவன்
  6. திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் அடையாள மூர்த்தியாய் விளங்குபவன்
  7. கங்கையின் புத்திரன்; அடியார்கள் சூடும் கவிமாலையைப் புனைந்து கொள்பவன்
  8. அறுமுகன், பன்னிருபுயன், கணக்கிலாத திருநானமங்களை உடையவன்
  9. யான் – எனது என்னும் அகங்கார – மமகாரங்களைக் கொண்டவர்களுக்கு அகப்படாதவன்
  10. பிறவிக் கடலைத் தாண்ட உதவும் கருணை ஓடக்காரன்
  11. திருவேரகம், திருவிடைக்கழி, திரிசிராப்பள்ளி, பழநி, திருத்தணி என்னும் தலங்களில் வாசம் செய்பவன்
  12. எனது உடற்சிறையைட் தொலைத்த நீதிமான்
  13. பார்வதியைத் தாய் என அழைக்கும் சேய்
  14. மனோலயத்தைத் தரும் ஒளி, யாகத்தைப் புரக்கும் காவல்தெய்வம்
  15. தேவசேனையின் ஆசைநாயகன்
  16. கடப்பமலர், கூதளமலர் அணிபவன்; அறிவிற்பெரியோன்
  17. தேவர்கள் பொருட்டு சரவணத்தில் அறுமுகனாய் உதித்தவன்
  18. திருமாலின் மருகன்; பிரமனைக் கோபித்தவன்
  19. வாழி என்று கூறி வணங்குபவர்க்குத் தன் திருவடியைத் தருபவன்
  20. குற்றாலம், கதிர்காமம் போன்ற தலங்களில் தேவர்கூட்டத்தில் விளங்குபவன்
  21. வாசுகி என்னும் பெரும்பாம்பை எடுத்து உதறும் மயிலை உடையவன்
  22. சக்ரவாளகிரியைக் காலால் இடித்துப் பொடிபடுத்தவல்ல கோழியைக் கொடியிற் கொண்டவன்
  23. உயிர்க்கு உயிராய், உணர்வுக்கு உணர்வாய், அணுவிற்கு அணுவாய் விளங்குபவன்
  24. என் வாசனாமலத்தைத் தொலைத்த குருமூர்த்தி, பெருங்காட்டில் வெளிப்பட்டு எனக்குத் துணை நின்ற சகாயமூர்த்தி
  25. தமிழ்ச் சங்கப்பலகையில் வீற்றிருந்த விநோதன்
  26. சிவனும் துதிக்கும்படியான ஞானமூர்த்தி
  27. கடல் அலற, சூரன் உடல் உருவ, வேலை ஏவியவன்
  28. கிர்த்திகை மைந்தன், தியானிப்பவர்களுக்கு வீட்டின்பைத் தருபவன்
  29. பார்வதியின் தாய் மேனையின் பேரன்; திறல் வீரன்; அர்க்கர்க் குலத்தைச் சூறையாடியவன்
  30. வேதியர்களின் செல்வம், பரமாத்மா, விசாகன், பல உருவம் கொள்பவன்
  31. நாரதரின் பேச்சைக் கேட்டு, வேடர்களின் தினைப்புனத்தில் வேற்றுருவுடன் கவலை மனத்தனாய் வில்லேந்திச் சென்றவன்
பொழிப்புரை

பொழிப்புரை

திருவகுப்பு
1. சீர்பாத வகுப்பு
2. தேவேந்திர சங்க வகுப்பு
3. வேல் வகுப்பு
4. திருவேளைக்காரன் வகுப்பு
5. பெருத்த வசன வகுப்பு
6. பூத வேதாள வகுப்பு
7. பொருகளத் தலகை வகுப்பு
8. செருக்களத் தலகை வகுப்பு
9. போர்க்களத் தலகை வகுப்பு
10. திருஞான வேழ வகுப்பு
11. திருக்கையில் வழக்க வகுப்பு
12. வேடிச்சி காவலன் வகுப்பு
13. சேவகன் வகுப்பு
14. வேல்வாங்கு வகுப்பு
15. புய வகுப்பு
16. சித்து வகுப்பு
17. கடைக்கணியல் வகுப்பு
18. சிவலோக வகுப்பு
19. மயில் வகுப்பு
20. கொலு வகுப்பு
21. வீரவாள் வகுப்பு
22. சிவகிரி வகுப்பு
23. திருச்செந்தில் வகுப்பு
24. திருப்பழநி வகுப்பு
25. திருப்பரங்கிரி வகுப்பு