திருவகுப்பு
திருப்புகழ் போலச் சந்தப்பாவால் அமைந்த இந்நூல் முருகக் கடவுளின் சீர்பாதப் பெருமை, அடியார் பெருமை, வேலாயுதத்தின் பெருமை, உபதேசப் பெருமை, பிரசாதப் பெருமை, திருப்புகழ்ப் பெருமை, கடைணோக்கப் பெருமை, திருக்கரங்களின் சிறப்பு ஆகிய இவை தமை வகுத்து எடுத்து ஓதுவதால் நூலுக்குத் திருவகுப்பு என்னும் பெயர் வாய்ந்தது.
வகுப்புகளுள் முதல் மூன்று வகுப்புகளான “சீர்பாத வகுப்பு”, “தேவேந்திர சங்க வகுப்பு”, “வேல் வகுப்பு” ஆகிய இம்மூன்றும் ‘மணி’, ‘மந்திர’, ‘ஔஷத’ வகுப்புகளாம்.
மேலும்
சீர்பாத வகுப்பு – ஞானத்தை அளித்து, யமபயத்தை நீக்கி, அருள் நெரியில் சேர்த்து வினைப்பகையை அழித்தொழிக்கும்.
தேவேந்திர சங்க வகுப்பு - பூதம் , பிசாசு ஆகிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது. .
வேல் வகுப்பு – எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த் துணையாய் நிற்பது. .
வேளைக்காரன் வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு, புய வகுப்பு – இம்மூன்றும் பத்தித் துறையிழிந்து ஆனந்த வாரியில் திளைத்து நிற்பதற்கு உதவும் துதி வகுப்புக்களாம். .
வேல் வாங்கு வகுப்பு – போர், பூகம்பம், வெள்ளம், தீ ஆகிய பெரிய ஆபத்துக்களினின்றும் நம்மைக் காக்க வல்ல பேராற்றல் கொண்டது. .
கடைகணியல் வகுப்பு – உலகோரை முருகனிடத்தே ஆற்றுப்படுத்தி உய்யும் வழியை எடுத்துரைக்கும் ‘பெருங்கருணை’ வகுப்பு இது. இதைத் ‘திருவருட் பிரசாத வகுப்பு’ அல்லது ‘திருமுருகாற்றுப்படை வகுப்பு’ எனவும் கூறலாம். .
இவ்வெட்டு வகுப்புக்களும் பாராயணத்திற்கும் மனப்பாடத்திற்கும் உரியனவாம்.
- டாக்டர் வ.சு.செங்கல்வராயபிள்ளை,
முருகவேள் பன்னிரு திருமுறை.
தானதன தத்ததன தானதன தத்ததன தானதன தத்ததன தானத் தானன
ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும்
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும்
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும்
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும்
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம
ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும்
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு
ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும்
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை
யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்
ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும்
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்
யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும்
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை
யேறவிடு நற்கருணை யோடக் காரனும்
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி
யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும்
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி
ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும்
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை
யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும்
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும்
யாகமுநி வர்க்குரிய காவற் காரனும்
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும்
யானையள விற்றுவளும் ஆசைக் காரனும்
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை
யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும்
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர்
வாவியில்உ தித்தமுக மாயக் காரனும்
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு
மானும்அய னைக்கறுவு கோபக் காரனும்
வாழியென நித்தமற வாதுபர விற்சரண
வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும்
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்
மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும்
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும்
வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும்
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது
வாகைபுனை குக்குடப தாகைக் காரனும்
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும்
வானிலணு வுக்கணுவு பாயக் காரனும்
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம
காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும்
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை
மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும்
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை
வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும்
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
வேலையுற விட்டதனி வேலைக் காரனும்
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர்
வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும்
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல்
வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும்
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி
சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும்
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி
யாகுலம னத்தினொடு போம்விற் காரனும்
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு
மேதகு குறத்திதிரு வேளைக் காரனே
தனத்த தனதன தனத்த தனதன
அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை
யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும்
அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும்
அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும்
அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்
அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும்
அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை
யடக்கி யவநெறி கடக்க விடுவதும்
எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு
எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும்
இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும்
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கி
தெதிரென இணைக்க அரியதும்
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும்
நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும்
நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென
நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும்
நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு
நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும்
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும்
உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர
உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும்
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்
உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே.
- தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன
- தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன
- தத்ததன தானதன தத்தனா தத்ததன தத்ததன தானதன தத்தனா தத்ததன
- தந்தத் தந்தனத் தான தாந்தன தந்தத் தந்தனத் தான தாந்தன
- தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன
- தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தந்ததன
- தனதனன தந்தனந் தந்தான தத்ததன தனதனன தந்தனந் தந்தான தத்ததன
- தனதனன தானதன தத்ததன தத்ததன தனதனன தானதன தத்ததன தத்ததன
- தனதன தத்த தனத்தன தத்த தானன தனதன தத்த தனத்தன தத்த தானன
- தானனா தான தனாதன தந்தன தானனா தான தனாதன தந்தன
அருண கணபண புயக சுடிகையின் அகில புவனமும் உதவு மலைமகள்
அமலை யாரியை யந்தரி சுந்தரி யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி
அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி
அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி
அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி
ஆயி திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர் ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன்
அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும் அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன்
அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன்
ஆசிலா சார தபோதன ரின்புறும் வாசகா தீத மனோலய பஞ்சரன்
அகரு ம்ருகமத களப பரிமள விகட முகபட கடின புளகித
அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி
அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன்
ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில் ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள்
அப்படி பத்தி பழுத்த மனத்தினர் அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன்
ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும் ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும்
அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும்
அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில் அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும்
அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன்
ஆறுமா மாதர் பயோதர பந்தியில் ஆரவே பாலமு தாருநெ டுந்தகை
வருண சரவண மடுவில் வருமொரு மதலை மறைகமழ் குதலை மொழியினன்
மதுக ராரவ மந்திர சிந்துர மணமறாத கடம்பு புனைந்தவன்
மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை
மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம் வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன்
மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன்
மாதிரமு மந்தரமு நீருநில னுங்கனக மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய
மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள்
மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன் உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன்
மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன்
மாதரா ரூபன் நிராகுல சிந்தையன் ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன்
வரத விதரண விரத அநுபவ மவுன குருபரன் நிபுண குணதரன்
வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற வலிய பாரவி லங்கிடு புங்கவன்
மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும் உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும்
மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன்
மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள் சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன்
வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன்
மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன்
மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன் வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன்
மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர் வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு
வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர் சூரமா சேனையை மோதுக ளந்தனில்
(சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை).
உருவம் இருளெழ எயிறு நிலவெழ உலகு வெருவர அசைய வருவன
உடைய நாயகி கண்டும கிழ்ந்திட நடைவி நோதவி தம்புரி பந்திய
ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன
உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும் ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன
யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன
யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ
உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில் உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன
உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில் உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன
உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல் உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன
ஓடைமால் வாரண யூகம் அடங்கலும் ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ
உடலி னிசிசரர் மவுலி ஒலியலும் உதடு மலைவன பதடி முலையின
உததி யேழும டங்கவு றிஞ்சியும் உதர வாரழல் நின்றுகொ ளுந்துவ
உக்கிரஇ ராவணன்எ டுத்தமே ருக்கிரியும் ஒற்றியிரு தோள்கொடுப றித்திடா தப்புவன
ஒன்றித் திண்குரற் கூகை பாம்பொடு வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன
ஒக்கமி டற்றில் இறக்கு குறைத்தலை விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன
யோகுபுரி யுங்குகையும் யோகபர ரும்பொருவ ஓடைமத தந்திவயி றூடினிது றங்குவன
உசிதபிசி தங்கொணர்ந் திங்கேற விற்றுமென மதமலையெ லும்புகொண் டங்காடி கட்டுவன
உதிரநிண வாள்பெருக வொட்டுவன வெட்டுவன உடலினடு வூடுருவ முட்டுவன தட்டுவன
ஒழுகுபி ணத்துநி ணத்தின் அளற்றி லேபழு ஒடியவு ழக்கிவ ழுக்கி யுருட்டி வீழ்வன
ஊசலார் வார்குழை யோலை யிடும்படி ஓதுசா மீகர நேமி பிடுங்குவ
கரணம் இடுவன குணலை யிடுவன கழையை நடுவன பவுரி வருவன
ககன கூடமு டைந்துவி ழும்படி கதறி வாயனல் கண்கனல் சிந்துவ
கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக
கண்டச் சம்பதிப் பேத மாம்பல கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி
கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன
காயெரிய பங்கியொடு சேகரமி குந்தசைவ காதுபடு சங்கவள மாலிகைபு னைந்திசைவ
கருணைய திகந்துவந் தொண்கோகு லப்பெரிய கருமுடியொ டும்படுங் கங்காள மொத்துவன
கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்கிசைய நடைநவிலு பாவனை யுதிக்குநட வித்தையின
கடகம டுத்த இடக்கை வலக்கை வாளின கருதிய லக்ஷிய லக்ஷண முற்று மோதுவ
காலமா றாத வராளிசி கண்டிகை பாலசீ காமர மானவி பஞ்சிகை
கவுட பயிரவி லளிதை கயிசிகை கவுளி மலகரி பவுளி யிசைவன
கனவ ராடிய ரும்பட மஞ்சரி தனத னாசிவி தம்படு பஞ்சமி
கைச்சுலவு கோன்முறைவி தித்தரா கத்தடைவில் உச்சமது சாதிகமெ டுத்துமேல் எட்டுவன
கஞ்சக் கஞ்சநற் றேசி ராஞ்சிகு றிஞ்சிப் பண்குறித் தியாழை யேந்துவ
கற்றவு டுக்கையி டக்கைக ளப்பறை மத்தளி கொட்டிய முற்றும டிப்பன
காரெனமு ழங்குகுர லேறுதுடி சந்த்ரவளை வீரமுர சுந்திமில்த டாரிகுட பஞ்சமுகி
கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன முறைமுறை கவந்தநின் றொன்றோடு கிட்டுவன
கசரதப தாகினிய ரக்கர்துணி பட்டுவிழு களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன
கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய
காதநூ றாயிர கோடி வளைந்தன பூதவே தாளம் அநேகவி தங்களே.
தனத்த தனதன தனத்த தனதன
அதிர்த்த பரிபுர பதத்தி பயிரவி அமைத்த கரதலி ப்ரியத்தை யுடையன
அடித்த தமருக கரத்தர் பயிரவர் நடித்த நவரச நடத்தை யறிவன
அருக்கர் பதமல வுடுக்கள் பதமள வடுக்கு பிணமொரு குறட்டி லடைசுவ
அளக்கர் உடைபட மிகுத்த குருதியை அடைத்து மடைபட வுடைத்து விடுவன
அரக்கர் முடிகளை யடுப்பு வகிர்வன அவற்றின் உலையென இரத்தம் விடுவன
அடுக்கல் எனுமவர் எயிற்றை யவர்கர அகப்பை யவைகொடு புகட்டி அடுவன
அமிழ்த்தி அடிவிழு பிணத்தின் நிணவெளி றளற்றி னிடையடி வழுக்கி விழுவன
அடப்பை யிடவரும் அணுக்க ருடன்வரு தடக்கை மதமலை நடத்தி வருவன
குதித்து மகிழ்வொடு மிதித்து நடமிடு குறட்கு மிகுதசை கொடுத்து வருவன
கொழுத்த குரகத இறைச்சி வகைவகை குவித்து முறைமுறை அவித்து நுகர்வன
குருத்து மலரினும் வெளுத்த நிணமது கொளுத்தி அனலதில் வெதுப்பி யிடுவன
குதட்டி நெடுயன உதட்டில் இடுதசை கொடிக்கு முதுசின நரிக்கும் உமிழ்வன
குணக்கு வளைகடல் வடக்கி யமதிசை குடக்கு முழுவது மடக்கு வயிறின
குரக்கு மிடறின கரத்தில் எழுகிரி குலுக்கி யடியொடு பறித்து நிமிர்வன
குதித்து முழுகியும் இரத்த நதியிடை குடித்தும் உணர்வொடு களித்து வருவன
குறத்தி யிறைவனை நிறைத்து மலரடி குறித்து வழிபடு குணத்தை யுடையன
துதிக்கை மலைகளை அடுக்கி அலகைகள் துதிக்க அவைமிசை யிருக்கும் அரசின
துளக்கம் உறுசுடர் விளக்கை யனையன சுழித்து வெருவர விழித்த விழியின
துதித்து வழிபட நடத்தல் குறையன சுகித்து வெளிபட நகைத்து வருவன
துணித்த கரியுடல் திணித்த மிடறிடை துவக்கி அவசமொ டுவிக்கி நிமிர்வன
தொலைத்த முடிநிரை பரப்பி வயிரவர் சுழற்றி நடமிடு துருத்தி இடுவன
துணுக்கம் உளஅவர் துணுக்கம் இலையென எடுத்த கழிநெடில் படித்து வருவன
சுரர்க்கு மகபதி தனக்கும் இனியொரு துளக்கம் இலையென மகிழ்ச்சி புகல்வன
தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுஎன நடித்து வருவன
எதிர்த்து மலைவன முடித்து வெளிமுக டிடித்து விழும்இடி இடித்த குரலின
இரட்டை இளமதி உதித்த எனவெளி றெயிற்றில் நிலவெழும் இருட்டு வடிவின
இயக்க முறுபல ரதத்தின் உருளைகள் இருத்தி அணிதரு பெருத்த குழையின
இடக்கை குடமுழ வுடுக்கை துடிபறை எடுத்து முகிலென முழக்கி வருவன
இதத்த கயிசிகம் இனித்த பயிரவி எழுப்பி எழுவகை நிருத்தம் இடுவன
இறப்பும் வரும்எழு பிறப்பும் அறஇனி திருத்தும் எனமயில் விருத்த மொழிவன
இடைக்க ழியில்ஒரு செருத்த ணியிலினி திருக்கும் அறுமுகன் ஒருத்தன் இளையவன்
இளைத்து நிசிசரர் பதைத்து மடியவொர் இமைப்பில் அமர்பொரு களத்தின் அலகையே.