3. பூத வேதாள வகுப்பு
சுருக்கவுரை
முருகன் சேனை
- ஆதிசேடன் தன் தலையிற் சுமக்கும் அகில உலகங்களையும் ஈன்றவளாகிய தேவியின் திருமைந்தன்,
- காங்கேயன்,
- நக்கீரனுக்கு உதவி புரிந்தவன்,
- குறுமுனிக்கு முத்தமிழ் போதித்தவன்,
- பிறவிக் கடலினின்றும் என்னை மீட்டவன்,
- தபோதனர்களின் உள்ளக் குகையில் விளங்குபவன்,
- தேவசேனைக்கு நாயகன்,
- மந்திர எழுத்துகளில் தங்கியும், அவைகட்கப்பாலும் விளங்குபவன்,
- பத்தர்களின் போற்றுதலை ஏற்பவன்,
- ஆறு திருப்பதி ஆதிய கணக்கில்லாத் தலங்களில் வீற்றிருப்பவன்,
- சிவந்த ஆடையன்,
- அறுவர் முலை உண்டவன்,
- சரவணபவன், கடப்பமாலையன், வள்ளி காதலன், சிவகுரு, திருமால் மருகன்,
- நினைப்பவர் தம் வினப்பகையை அறுப்பவன்,
- வள்ளியின் பொருட்டு கிழ வேதியனானவன்,
- கூதள மாலை புனைந்தவன்,
- குருபரன், குணதரன்,
- பிரமனை விலங்கிட்டவன்,
- வேற்கரத்தோன்,
- வீடளிப்பவன்,
- விநாயகருடன் போட்டியிட்டு உலகெலாம் ஒரு நொடியில் வலம் வந்தவன்,
- ஆறு சமயங்களுக்கும் அப்பாற்பட்டவன்,
- யாவும் உணர்ந்தவன்,
- சேவற்கொடியோன்
– ஆகிய முருகவேள் வேல் ஏந்தி சூரனது சேனையுடன் பொருத போர்க்களத்தில்
- இருள் நிறம் பொருந்தி அச்சத்தைத் தந்தன சில வேதாளங்கள்
- நடனம் புரிந்தன சில
- தத்தம் குழைந்தைகள் அழாது காத்தன சில
- கடல்கள் தாவின சில
- போர்க்களத்தில் சிதறிக் கிடந்த இரத்தின மணிகளைக் கொண்டு ‘ஒற்றையா இரட்டையா’ என்னும் விளையாட்டைப் புரிந்தன சில
- திருமணம் நடத்தின சில
- இரத்த ஆற்றில் விளையாடின சில
- யானைகளை கடைவாய்க்குள்ளே விழுங்கின சில
- ஏழுகடல் நீரையும் உறிஞ்சியும் பசி தீராது நின்றன சில
- மலையை அசைப்பன சில
- கோட்டான், பாம்பு இவைகளைத் தாலியிற் கோத்தணிந்தன சில
- விழித்தன சில
- இறந்துபட்ட யானையின் வயிற்றிற் கிடந்து தூங்கின சில
- மாமிசக்கடை வைக்க யானைகளைன் எலும்பு கொண்டு கடைகளைக் கட்டின சில
- வெட்டுவன சில
- முட்டுவன சில
- மாமிசக் கொழுப்பில் வழுக்கி விழுந்து உருண்டன சில
- காதிற் குழையோலைக்காகப் பொன்மலையையே பிடுங்கின சில
- கரணம் இட்டன சில
- கொக்கரித்தன சில
- மூங்கில் நட்டு நடனமிட்டன சில
- கண்கள் தீக்கொளுந்தப் பார்த்தன சில
- பஞ்ச தாள பேதங்களைக் கைத்தாளமிட்டு காட்டின சில
- எரியன்ன தலைமயிர், காதிற் சங்கக் குழை, மாலைகள் விளங்க வந்தன சில
- எலும்புகளை மொத்தி மோதி விளையாடின சில
- பலவித நடனங்களை நடித்தன சில
- வாள்வீச்சிலக்கணம் ஓதின சில
- வராளி முதலிய ராகங்களை உரக்கப் பாடி யாழ் ஏந்தின சில
- உடுக்கை ஆதிய வாத்தியங்களை முழக்கின சில
- கோடிக்கணக்கான பறையடித்தன சில
- போர்க்களம் முழுவதும் முருகண் திருப்புகழை முழக்கின சில
இங்ஙனம் பொல்லாத அனேகவித பூதவேதாளங்கள் லக்ஷகோடி காத தூரம் அப்போர்க்களத்தைச் சுற்றி வந்தன
பொழிப்புரை
பொழிப்புரை