திருவகுப்பு

        திருப்புகழ் போலச் சந்தப்பாவால் அமைந்த இந்நூல் முருகக் கடவுளின் சீர்பாதப் பெருமை, அடியார் பெருமை, வேலாயுதத்தின் பெருமை, உபதேசப் பெருமை, பிரசாதப் பெருமை, திருப்புகழ்ப் பெருமை, கடைணோக்கப் பெருமை, திருக்கரங்களின் சிறப்பு ஆகிய இவை தமை வகுத்து எடுத்து ஓதுவதால் நூலுக்குத் திருவகுப்பு என்னும் பெயர் வாய்ந்தது.

        வகுப்புகளுள் முதல் மூன்று வகுப்புகளான “சீர்பாத வகுப்பு”, “தேவேந்திர சங்க வகுப்பு”, “வேல் வகுப்பு” ஆகிய இம்மூன்றும் ‘மணி’, ‘மந்திர’, ‘ஔஷத’ வகுப்புகளாம்.

மேலும்
        சீர்பாத வகுப்பு – ஞானத்தை அளித்து, யமபயத்தை நீக்கி, அருள் நெரியில் சேர்த்து வினைப்பகையை அழித்தொழிக்கும்.

        தேவேந்திர சங்க வகுப்பு - பூதம் , பிசாசு ஆகிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது. .

        வேல் வகுப்பு – எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த் துணையாய் நிற்பது. .

        வேளைக்காரன் வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு, புய வகுப்பு – இம்மூன்றும் பத்தித் துறையிழிந்து ஆனந்த வாரியில் திளைத்து நிற்பதற்கு உதவும் துதி வகுப்புக்களாம். .

        வேல் வாங்கு வகுப்பு – போர், பூகம்பம், வெள்ளம், தீ ஆகிய பெரிய ஆபத்துக்களினின்றும் நம்மைக் காக்க வல்ல பேராற்றல் கொண்டது. .

        கடைகணியல் வகுப்பு – உலகோரை முருகனிடத்தே ஆற்றுப்படுத்தி உய்யும் வழியை எடுத்துரைக்கும் ‘பெருங்கருணை’ வகுப்பு இது. இதைத் ‘திருவருட் பிரசாத வகுப்பு’ அல்லது ‘திருமுருகாற்றுப்படை வகுப்பு’ எனவும் கூறலாம். .

        இவ்வெட்டு வகுப்புக்களும் பாராயணத்திற்கும் மனப்பாடத்திற்கும் உரியனவாம். 

- டாக்டர் வ.சு.செங்கல்வராயபிள்ளை,
முருகவேள் பன்னிரு திருமுறை.

தனதனன தனதனன தனதனன தனதனன
                   தனதனன தனதனன                    தனதான தானதன


உததியிடை கடவுமர கதவருண குலதுரக
               வுபலளித கனகரத                    சதகோடி சூரியர்கள்

உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
               யுகமுடிவின் இருளகல                     ஒருசோதி வீசுவதும்

உடலுமுட லுயிருநிலை பெறுதல்பொரு ளெனவுலக
               மொருவிவரு மநுபவன                     சிவயோக சாதனையில்

ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
               யுணர்வுவிழி கொடுநியதி                    தமதூடு நாடுவதும்

உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு
               முழலுவன பரசமய                     கலையார வாரமற

உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
               வுளபடியை யுணருமவ                     ரநுபூதி யானதுவும்

உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய
               வுருவுடைய மலினபவ                     சலராசி யேறவிடும்

உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்
               உறைவதுவு முலைவிலது                    மடியேன் மனோரதமும்

இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர
               இமகிரண தருணவுடு                     பதிசேர் சடாமவுலி

இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென
               இமையமயில் தழுவுமொரு                    திருமார்பி லாடுவதும்

இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
               றெரிபுகுத வுரகர்பதி                     அபிஷேக மாயிரமும்

எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
               இளையதளர் நடைபழகி                     விளையாடல் கூருவதும்

இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
               இலகுவெகு கடவிகட                     தடபார மேருவுடன்

இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
               எழுபுவியை யொருநொடியில்                     வலமாக வோடுவதும்

எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை
               யிரலைமரை யிரவுபகல்                     இரைதேர்க டாடவியில்

எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
               இனிதுபயில் சிறுமிவளர்                     புனமீ துலாவுவதும்

முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
               முதுவடவை விழிசுழல                     வருகால தூதர்கெட

முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை
               முடியவரு வதுமடியர்                    பகைகோடி சாடுவதும்

மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
               முறியுமலர் வகுளதள                    முழுநீல தீவரமும்

முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத
               முநிவர்கரு தரியதவ                    முயல்வார் தபோபலமும்

முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு
               முககுமர சரணமென                    அருள்பாடி யாடிமிக

மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
               முழுகுவதும் வருகவென                    அறைகூவி யாளுவதும்

முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
               துலகறிய மழலைமொழி                    கொடுபாடும் ஆசுகவி

முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
               முகுளபரி மளநிகில                    கவிமாலை சூடுவதும்

மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
               மடுநடுவில் வெருவியொரு                    விசையாதி மூலமென

வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
               வகிருமட லரிவடிவு                    குறளாகி மாபலியை

வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
               வளருமுகில் நிருதனிரு                    பதுவாகு பூதரமும்

மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
                                  மருகனிசி சரர்தளமும்                    வருதார காசுரனும்

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
               மறுகிமுறை யிடமுனியும்                    வடிவேல னீலகிரி

மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
               வசனிபயி ரவிகவுரி                    யுமையாள்த்ரி சூலதரி

வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை
               வநிதையபி நவையநகை                    யபிராம நாயகிதன்

மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்
               மறையின்முதல் நடுமுடிவின்                    மணநாறு சீறடியே.

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன தனதான தானதன



உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள்

உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்

உடலுமுட லுயிருநிலை பெறுதல்பொரு ளெனவுலக
மொருவிவரு மநுபவன சிவயோக சாதனையில்

ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
யுணர்வுவிழி கொடுநியதி தமதூடு நாடுவதும்

உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு
முழலுவன பரசமய கலையார வாரமற

உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ரநுபூதி யானதுவும்

உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய
வுருவுடைய மலினபவ சலராசி யேறவிடும்

உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்
உறைவதுவு முலைவிலது மடியேன் மனோரதமும்

இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர
இமகிரண தருணவுடு பதிசேர் சடாமவுலி

இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென
இமையமயில் தழுவுமொரு திருமார்பி லாடுவதும்

இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
றெரிபுகுத வுரகர்பதி அபிஷேக மாயிரமும்

எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
இளையதளர் நடைபழகி விளையாடல் கூருவதும்

இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்

இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் வலமாக வோடுவதும்

எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை
யிரலைமரை யிரவுபகல் இரைதேர்க டாடவியில்

எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
இனிதுபயில் சிறுமிவளர் புனமீ துலாவுவதும்

முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட

முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை
முடியவரு வதுமடியர் பகைகோடி சாடுவதும்

மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
முறியுமலர் வகுளதள முழுநீல தீவரமும்

முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத
முநிவர்கரு தரியதவ முயல்வார் தபோபலமும்

முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு
முககுமர சரணமென அருள்பாடி யாடிமிக

மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
முழுகுவதும் வருகவென அறைகூவி யாளுவதும்

முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
துலகறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி

முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
முகுளபரி மளநிகில கவிமாலை சூடுவதும்

மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
வகிருமட லரிவடிவு குறளாகி மாபலியை

வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில் நிருதனிரு பதுவாகு பூதரமும்

மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
மருகனிசி சரர்தளமும் வருதார காசுரனும்

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும் வடிவேல னீலகிரி

மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரி யுமையாள்த்ரி சூலதரி

வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை
வநிதையபி நவையநகை யபிராம நாயகிதன்

மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்
மறையின்முதல் நடுமுடிவின் மணநாறு சீறடியே.

சுருக்கவுரை
பொழிப்புரை

        தனதன தனதன தனதன தனதன
               தனதன தனதன
தானாந்தன தந்தன தானாந்தன தந்தன

       தரணியி லரணிய முரணிர ணியனுடல்
               தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி

       தமருக பரிபுர ஒலிகொடு நடநவில்
               சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை

       சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள்
               சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை

       தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள்
               தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

       இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள
               கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்

       இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர்
               எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில்

       இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட
               விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை

       எழுதிய படமென இருளறு சுடரடி
               யிணை தொழு மவுனிகள்
ஏகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி

       கரணமு மரணமு மலமொடு முடல்படு
               கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்

       கனலெரி கணபண குணமணி யணிபணி
               கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

       கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி
               கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு

       கரைபொழி திருமுக கருணையி லுலகெழு
               கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்

       அரணெடு வடவரை யடியொடு பொடிபட
               அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கு மரன்குகன்

       அறுமுக னொருபதொ டிருபுய னபினவ
               னழகிய குறமகள்
தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்

       அடன்மிகு கடதட விகடித மதகளி
               றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்

       அதிபதி யெனவரு பொருதிறல் முருகனை
               அருள்பட மொழிபவர்
ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே.

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன
தானாந்தன தந்தன தானாந்தன தந்தன

தரணியி லரணிய முரணிர ணியனுடல்
தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில்
சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள்
சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை

தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள்
தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள
கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர்
எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில்

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட
விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி
யிணை தொழு மவுனிகள்
ஏகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடு முடல்படு
கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்

கனலெரி கணபண குணமணி யணிபணி
கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி
கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு
கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்

அரணெடு வடவரை யடியொடு பொடிபட
அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கு மரன்குகன்

அறுமுக னொருபதொ டிருபுய னபினவ
னழகிய குறமகள்
தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்

அடன்மிகு கடதட விகடித மதகளி
றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்

அதிபதி யெனவரு பொருதிறல் முருகனை
அருள்பட மொழிபவர்
ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தனத்ததன தனத்ததன தனத்ததன
           தனத்ததன தனத்ததன தனத்ததன
                   தனத்ததன தான

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
           கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
                   விழிக்குநிக ராகும்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
           கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
                   தெறிக்கவர மாகும்

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
           கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
                   யிடித்துவழி காணும்

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
           ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
                   புசிக்கவருள் நேரும்

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
           தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும்
                   இடுக்கண்வினை சாடும்

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
           ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
                   ஒளிப்பிரபை வீசும்

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
           நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
                   எனக்கொர்துணை யாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
           யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
                   மறத்தைநிலை காணும்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
           தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
                   கழற்குநிக ராகும்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
           வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
                   விதிர்க்கவளை வாகும்

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
           வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
                   பகற்றுணைய தாகும்

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
           பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
                   விருப்பமொடு சூடும்

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
           குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
                   நிறைத்துவிளை யாடும்

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
           முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
                   விசைத்ததிர வோடும்

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
           குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
                   விழித்தலற மோதும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
           விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
                   நடத்துகுகன் வேலே.

தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தான

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும்
இடுக்கண்வினை சாடும்

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கொர்துணை யாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காணும்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தானதன தத்ததன தானதன தத்ததன தானதன தத்ததன தானத் தானன

ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும்

ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும்

ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும்

ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும்

ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும்

ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும்

ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும்

ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும் ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும்

யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும் யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும்

யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை யேறவிடு நற்கருணை யோடக் காரனும்

ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும்

ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும்

யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும்

ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும் யாகமுநி வர்க்குரிய காவற் காரனும்

ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும் யானையள விற்றுவளும் ஆசைக் காரனும்

ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும்

வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர் வாவியில்உ தித்தமுக மாயக் காரனும்

வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு மானும்அய னைக்கறுவு கோபக் காரனும்

வாழியென நித்தமற வாதுபர விற்சரண வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும்

மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய் மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும்

வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும் வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும்

வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது வாகைபுனை குக்குடப தாகைக் காரனும்

மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும் வானிலணு வுக்கணுவு பாயக் காரனும்

வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும்

மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும்

வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும்

வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ வேலையுற விட்டதனி வேலைக் காரனும்

மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர் வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும்

மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல் வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும்

வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும்

வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி யாகுலம னத்தினொடு போம்விற் காரனும்

மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு மேதகு குறத்திதிரு வேளைக் காரனே

சுருக்கவுரை
பொழிப்புரை

தனத்த தனதன தனத்த தனதன

அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை

யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும்

அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும்

அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும்

அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்

அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும்

அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை

யடக்கி யவநெறி கடக்க விடுவதும்

எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு

எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும்

இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்

இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும்

இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கி

தெதிரென இணைக்க அரியதும்

இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்

கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும்

நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள்

நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும்

நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென

நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும்

நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு

நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும்

நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட

நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும்

உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர

உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும்

ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென

உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்

உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்

ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை

உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்

ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே.

சுருக்கவுரை
பொழிப்புரை
  1. தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன
  2. தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன
  3. தத்ததன தானதன தத்தனா தத்ததன தத்ததன தானதன தத்தனா தத்ததன
  4. தந்தத் தந்தனத் தான தாந்தன தந்தத் தந்தனத் தான தாந்தன
  5. தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன
  6. தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தந்ததன
  7. தனதனன தந்தனந் தந்தான தத்ததன தனதனன தந்தனந் தந்தான தத்ததன
  8. தனதனன தானதன தத்ததன தத்ததன தனதனன தானதன தத்ததன தத்ததன
  9. தனதன தத்த தனத்தன தத்த தானன தனதன தத்த தனத்தன தத்த தானன
  10. தானனா தான தனாதன தந்தன தானனா தான தனாதன தந்தன


அருண கணபண புயக சுடிகையின் அகில புவனமும் உதவு மலைமகள்
அமலை யாரியை யந்தரி சுந்தரி யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி
அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி
அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி
அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி
ஆயி திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர் ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன்
அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும் அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன்
அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன்
ஆசிலா சார தபோதன ரின்புறும் வாசகா தீத மனோலய பஞ்சரன்

அகரு ம்ருகமத களப பரிமள விகட முகபட கடின புளகித
அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி
அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன்
ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில் ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள்
அப்படி பத்தி பழுத்த மனத்தினர் அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன்
ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும் ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும்
அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும்
அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில் அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும்
அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன்
ஆறுமா மாதர் பயோதர பந்தியில் ஆரவே பாலமு தாருநெ டுந்தகை

வருண சரவண மடுவில் வருமொரு மதலை மறைகமழ் குதலை மொழியினன்
மதுக ராரவ மந்திர சிந்துர மணமறாத கடம்பு புனைந்தவன்
மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை
மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம் வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன்
மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன்
மாதிரமு மந்தரமு நீருநில னுங்கனக மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய
மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள்
மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன் உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன்
மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன்
மாதரா ரூபன் நிராகுல சிந்தையன் ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன்

வரத விதரண விரத அநுபவ மவுன குருபரன் நிபுண குணதரன்
வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற வலிய பாரவி லங்கிடு புங்கவன்
மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும் உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும்
மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன்
மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள் சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன்
வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன்
மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன்
மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன் வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன்
மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர் வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு
வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர் சூரமா சேனையை மோதுக ளந்தனில்

(சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை).

உருவம் இருளெழ எயிறு நிலவெழ உலகு வெருவர அசைய வருவன
உடைய நாயகி கண்டும கிழ்ந்திட நடைவி நோதவி தம்புரி பந்திய
ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன
உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும் ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன
யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன
யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ
உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில் உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன
உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில் உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன
உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல் உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன
ஓடைமால் வாரண யூகம் அடங்கலும் ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ

உடலி னிசிசரர் மவுலி ஒலியலும் உதடு மலைவன பதடி முலையின
உததி யேழும டங்கவு றிஞ்சியும் உதர வாரழல் நின்றுகொ ளுந்துவ
உக்கிரஇ ராவணன்எ டுத்தமே ருக்கிரியும் ஒற்றியிரு தோள்கொடுப றித்திடா தப்புவன
ஒன்றித் திண்குரற் கூகை பாம்பொடு வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன
ஒக்கமி டற்றில் இறக்கு குறைத்தலை விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன
யோகுபுரி யுங்குகையும் யோகபர ரும்பொருவ ஓடைமத தந்திவயி றூடினிது றங்குவன
உசிதபிசி தங்கொணர்ந் திங்கேற விற்றுமென மதமலையெ லும்புகொண் டங்காடி கட்டுவன
உதிரநிண வாள்பெருக வொட்டுவன வெட்டுவன உடலினடு வூடுருவ முட்டுவன தட்டுவன
ஒழுகுபி ணத்துநி ணத்தின் அளற்றி லேபழு ஒடியவு ழக்கிவ ழுக்கி யுருட்டி வீழ்வன
ஊசலார் வார்குழை யோலை யிடும்படி ஓதுசா மீகர நேமி பிடுங்குவ

கரணம் இடுவன குணலை யிடுவன கழையை நடுவன பவுரி வருவன
ககன கூடமு டைந்துவி ழும்படி கதறி வாயனல் கண்கனல் சிந்துவ
கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக
கண்டச் சம்பதிப் பேத மாம்பல கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி
கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன
காயெரிய பங்கியொடு சேகரமி குந்தசைவ காதுபடு சங்கவள மாலிகைபு னைந்திசைவ
கருணைய திகந்துவந் தொண்கோகு லப்பெரிய கருமுடியொ டும்படுங் கங்காள மொத்துவன
கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்கிசைய நடைநவிலு பாவனை யுதிக்குநட வித்தையின
கடகம டுத்த இடக்கை வலக்கை வாளின கருதிய லக்ஷிய லக்ஷண முற்று மோதுவ
காலமா றாத வராளிசி கண்டிகை பாலசீ காமர மானவி பஞ்சிகை

கவுட பயிரவி லளிதை கயிசிகை கவுளி மலகரி பவுளி யிசைவன
கனவ ராடிய ரும்பட மஞ்சரி தனத னாசிவி தம்படு பஞ்சமி
கைச்சுலவு கோன்முறைவி தித்தரா கத்தடைவில் உச்சமது சாதிகமெ டுத்துமேல் எட்டுவன
கஞ்சக் கஞ்சநற் றேசி ராஞ்சிகு றிஞ்சிப் பண்குறித் தியாழை யேந்துவ
கற்றவு டுக்கையி டக்கைக ளப்பறை மத்தளி கொட்டிய முற்றும டிப்பன
காரெனமு ழங்குகுர லேறுதுடி சந்த்ரவளை வீரமுர சுந்திமில்த டாரிகுட பஞ்சமுகி
கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன முறைமுறை கவந்தநின் றொன்றோடு கிட்டுவன
கசரதப தாகினிய ரக்கர்துணி பட்டுவிழு களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன
கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய
காதநூ றாயிர கோடி வளைந்தன பூதவே தாளம் அநேகவி தங்களே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தனத்த தனதன தனத்த தனதன

அதிர்த்த பரிபுர பதத்தி பயிரவி அமைத்த கரதலி ப்ரியத்தை யுடையன

அடித்த தமருக கரத்தர் பயிரவர் நடித்த நவரச நடத்தை யறிவன

அருக்கர் பதமல வுடுக்கள் பதமள வடுக்கு பிணமொரு குறட்டி லடைசுவ

அளக்கர் உடைபட மிகுத்த குருதியை அடைத்து மடைபட வுடைத்து விடுவன

அரக்கர் முடிகளை யடுப்பு வகிர்வன அவற்றின் உலையென இரத்தம் விடுவன

அடுக்கல் எனுமவர் எயிற்றை யவர்கர அகப்பை யவைகொடு புகட்டி அடுவன

அமிழ்த்தி அடிவிழு பிணத்தின் நிணவெளி றளற்றி னிடையடி வழுக்கி விழுவன

அடப்பை யிடவரும் அணுக்க ருடன்வரு தடக்கை மதமலை நடத்தி வருவன

குதித்து மகிழ்வொடு மிதித்து நடமிடு குறட்கு மிகுதசை கொடுத்து வருவன

கொழுத்த குரகத இறைச்சி வகைவகை குவித்து முறைமுறை அவித்து நுகர்வன

குருத்து மலரினும் வெளுத்த நிணமது கொளுத்தி அனலதில் வெதுப்பி யிடுவன

குதட்டி நெடுயன உதட்டில் இடுதசை கொடிக்கு முதுசின நரிக்கும் உமிழ்வன

குணக்கு வளைகடல் வடக்கி யமதிசை குடக்கு முழுவது மடக்கு வயிறின

குரக்கு மிடறின கரத்தில் எழுகிரி குலுக்கி யடியொடு பறித்து நிமிர்வன

குதித்து முழுகியும் இரத்த நதியிடை குடித்தும் உணர்வொடு களித்து வருவன

குறத்தி யிறைவனை நிறைத்து மலரடி குறித்து வழிபடு குணத்தை யுடையன

துதிக்கை மலைகளை அடுக்கி அலகைகள் துதிக்க அவைமிசை யிருக்கும் அரசின

துளக்கம் உறுசுடர் விளக்கை யனையன சுழித்து வெருவர விழித்த விழியின

துதித்து வழிபட நடத்தல் குறையன சுகித்து வெளிபட நகைத்து வருவன

துணித்த கரியுடல் திணித்த மிடறிடை துவக்கி அவசமொ டுவிக்கி நிமிர்வன

தொலைத்த முடிநிரை பரப்பி வயிரவர் சுழற்றி நடமிடு துருத்தி இடுவன

துணுக்கம் உளஅவர் துணுக்கம் இலையென எடுத்த கழிநெடில் படித்து வருவன

சுரர்க்கு மகபதி தனக்கும் இனியொரு துளக்கம் இலையென மகிழ்ச்சி புகல்வன

தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுஎன நடித்து வருவன

எதிர்த்து மலைவன முடித்து வெளிமுக டிடித்து விழும்இடி இடித்த குரலின

இரட்டை இளமதி உதித்த எனவெளி றெயிற்றில் நிலவெழும் இருட்டு வடிவின

இயக்க முறுபல ரதத்தின் உருளைகள் இருத்தி அணிதரு பெருத்த குழையின

இடக்கை குடமுழ வுடுக்கை துடிபறை எடுத்து முகிலென முழக்கி வருவன

இதத்த கயிசிகம் இனித்த பயிரவி எழுப்பி எழுவகை நிருத்தம் இடுவன

இறப்பும் வரும்எழு பிறப்பும் அறஇனி திருத்தும் எனமயில் விருத்த மொழிவன

இடைக்க ழியில்ஒரு செருத்த ணியிலினி திருக்கும் அறுமுகன் ஒருத்தன் இளையவன்

இளைத்து நிசிசரர் பதைத்து மடியவொர் இமைப்பில் அமர்பொரு களத்தின் அலகையே.

சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை
-- निर्मीयमाना --
சுருக்கவுரை
பொழிப்புரை

தானதன தந்ததன தானதன தந்ததன
        தானதன தந்ததன             தந்த தனனா

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
        ஆலமரு வும்பணியி            ரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
        ளாமெனமொ ழிந்தகல            வென்று விடுமே

ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
        ஆதிபக வன்துயில்அ            நந்தன் மணிசேர்

ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
        யாகமுழு துங்குலைய            வந்த றையுமே

வேதமுழு தும்புகல் இராமன்ஒரு தம்பிமிசை
        வீடணன் அருந்தமையன்            மைந்தன் இகலாய்

வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
        மேல்இடி எனும்படிமு            ழங்கி விழுமே

மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
        மேவுசர ணங்கொடுல            கெங்கு முழுமெ

வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
        வேஅழலெ னுஞ்சினமு            டன்ப டருமே

போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
        போதனை யிரந்துமலர்            கொண்டு முறையே

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
        போல்முடிவி ளங்கவரும்            அஞ்சம் அடுமே

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
        பூரணக ணங்களொடு            வந்து தொழவே

போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
        போயினம் எனும்படிஎ            திர்ந்து விழுமே

கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
        கோலவுட லங்கருகி            வெந்து விழவே

கோபமொடு கண்டவிழி நாதர்அணி யும்பணிகள்
        கூடிமனம் அஞ்சிவளை            சென்று புகவே

கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
        கோழியொடு வென்றிமுறை            யும்ப கருமே

கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
       கோகனதம் அன்பொடுவ            ணங்கு மயிலே.

தானதன தந்ததன தானதன தந்ததன
தானதன தந்ததன தந்த தனனா

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே

ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர்

ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
யாகமுழு துங்குலைய வந்த றையுமே

வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்

வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே

மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ

வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே

போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
போதனை யிரந்துமலர் கொண்டு முறையே

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரணக ணங்களொடு வந்து தொழவே

போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே

கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
கோலவுட லங்கருகி வெந்து விழவே

கோபமொடு கண்டவிழி நாதர்அணி யும்பணிகள்
கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே

கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே

கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தனதன தனதன தனதன தனதன
              தனந்த தனனா                  தனந்த தனனா

        கொலுக் கூட்டத்தினரின் வர்ணணை

அருமறை யவன்முதல் அரிஅரன் மகபதி
              அநங்கன் இமையோர்                  இனங்கள் ஒருபால்

அருணனு மதியமும் அனல்ஏழு கனலியும்
              அணங்கி னொடுசூழ்                  கணங்கள் ஒருபால்

வருணனும் நிருதியும் வழியொடு தனதனும்
              மகிழ்ந்து மிகவே                  புகழ்ந்த தொருபால்

வயிரவ ரொடுபடர் உவணரும் உரகரும்
              வரங்கள் பெறவே                  இரங்க ஒருபால்

இருடிகள் எவர்களும் இனியகி னரர்களும்
              இணங்கி எதிரே                  வணங்க ஒருபால்

இபமுக வனும்எழில் இளவல்கள் அனைவரும்
              இயன்ற நெறியே                  முயன்ற தொருபால்

உருமலி குறளின மொடுவசு முசுமுகன்
              உறைந்து பரிவாய்                  நிறைந்த தொருபால்

உடுவொடு நடவுப னிருவரு முறைமுறை
              உகந்து தொழவே                  மிகுந்த தொருபால்

அடல்விடை முகன்அறை கதையுற வெகுசனம்
              அதுங்கி அருகே                  ஒதுங்க ஒருபால்

அயன்முடி திருகிய வயவனு நியமமொ
              டடங்கி வலமே                  தொடங்க ஒருபால்

மடல்புனை புகரொடு வருபதி னொருவரும்
              மருங்கின் உறவே                  நெருங்க ஒருபால்

மருவொடு துவர்இரு வருமிசை வலமொடு
              வசிந்து மனமே                  கசிந்த தொருபால்

மிடலிறை விறலரி விமலர்கள் அருள்சுதன்
              வியந்து விரைவாய்                  நயந்த தொருபால்

வெயில்விரி சுடரவன் மகனொடு மதிமகன்
              விளம்பு முறையே                  கிளம்ப ஒருபால்

உடலொளி மவுனிகள் உடன்உப னிடதரும்
              உளங் குளிரவே                  விளங்க ஒருபால்

உமைதிரு மகள்நில மகள்கலை மகளொடும்
              உகந்தெ வருமே                  தொகுந்த தொருபால்

அதிபகி ரதிபயி ரவிபக வதிசசி
              யரம்பை யருமே                  நிரம்ப ஒருபால்

அழகிய கவுரியொ டிலகிய வலவையும்
              அடைந்து தயவாய்                  மிடைந்த தொருபால்

மதியர சருநிறை வசியரும் வினைஞரும்
              மலிந்து முகமே                  பொலிந்த தொருபால்

வருசிவன் அடியவர் அரகர எனமுறை
              வழங்கு கடல்போல்                  முழங்க ஒருபால்

விதிமுறை கருதியை வகைபுரி கருவிகள்
              விளைந்த ஒலிவான்                  அலைந்த தொருபால்

விதமுடன் அபிநய வனிதையர் சதிமுறை
              விரிந்த நடமே பு                 ரிந்த தொருபால்

உதிர்தரு மலர்விரை யுறுபுகை ம்ருகமதம்
              உமிழ்ந்த மணமே                  கமழ்ந்த தொருபால்

ஒழுகிய கிரிதொடு பணிதம தடுசுடர்
              உவந்த ஒளியே                  நிவந்த தொருபால்

அரியக டெனமுக டளவிய ஒருகுடை
              அமர்ந்த நிழலே                  சமைந்த தொருபால்

அருமட அனமென இருபுடை கவரிகள்
              அசைந்த அழகே                  யிசைந்த தொருபால்

வரிசைசெய் துயலொடு வனமயில் சிவிறியின்
              வயங்கு சிறுகால்                  இயங்க ஒருபால்

மறுகட லினில்எழு நிறைமதி அமுதென
              வரிந்து பனிநீர்                  சொரிந்த தொருபால்

விரியிருள் வலிதரு கிரணம தெனநல
              மிகுஞ்சு ழலில்வீ                  சுகுஞ்ச மொருபால்

வியன்மர கதமணி மிளிர்தரு களசெதிர்
              விரைந்து நிரையாய்                  நிரைந்த தொருபால்

உரியவெ ளிலையுடன் உயரிய கமுகினில்
              உகுந்த கனியே                  பகுந்த தொருபால்

உலகுள வனிதையர் அவரவர் விரதமொ
              டுணர்ந்து கனியே                  கொணர்ந்த தொருபால்

முருகவேளின் திருக்கோல வர்ணணை - கேசாதி பாதம்

அறுகதி ரவரென அறுமணி மவுலிகள்
              அடர்ந்து வெயிலே                  படர்ந்த தொருபால்

அறுமதி எனஅறு திருமுக சததள
              அலர்ந்த மலரே                  மலர்ந்த தொருபால்

மறுவறு கடலென மருவுப னிருவிழி
              வழிந்த அருளே                  பொழிந்த தொருபால்

வனைதரு மகரமு மணியணி பணிகளும்
              வயங்கு குழையே                  தயங்க ஒருபால்

இறுகுபொன் மலையொடும் இடறுப னிருபுயம்
              இசைந்து நெடுவான்                  அசைந்த தொருபால்

எழிலியை அனையப னிருகையில் அயில்முதல்
              இலங்கு படையே                  துலங்க ஒருபால்

உறுவரை யருவியை நிகர்தரும் உரமிசை
              யுடன் கொள் புரிநூல்                  கிடந்த தொருபால்

உருமென இகலிமுன் எதிர்பொரும் அவுணருள்
              உடைந்த உடைவாள்                  சிறந்த தொருபால்

அநவர தமுமறை முறையிடு பரிபுரம்
              அலங்கும் இருதாள்                  குலுங்க ஒருபால்

                தேவியர்

அளவறு கலவியின் முழுகிய குறமகள்
              அமர்ந்துள் ஒயிலாய்                  நிமிர்ந்த தொருபால்

வனதரு வினிலுறை சதமகன் அருள்மகள்
              வதிந்து மணமே                  பொதிந்த தொருபால்

                அடியார்கள்

வருமடி யவரிடம் வலியச நதம்வர
              வளர்ந்த சபையே                   கிளர்ந்த தொருபால்

நினைவொடு பணிபவர் வினைதுகள் படஎதிர்
              நினைந்து திருநீ                  றணிந்த தொருபால்

நிறைமல ரொடுநல கலவையும் உயர்குரு
              நினைந்து தரவே                  புனைந்த தொருபால்

தினகரன் உலவுச நிதியினில் இரவலர்
              தெளிந்த தமிழே                  பொழிந்த தொருபால்

சிவபர கிரியினில் ஒருசிவன் வடிவொடு
              திருந்த முருகோன்                   இருந்த கொலுவே.

தனதன தனதன தனதன தனதன
தனந்த தனனா தனந்த தனனா

கொலுக் கூட்டத்தினரின் வர்ணணை

அருமறை யவன்முதல் அரிஅரன் மகபதி
அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால்

அருணனு மதியமும் அனல்ஏழு கனலியும்
அணங்கி னொடுசூழ் கணங்கள் ஒருபால்

வருணனும் நிருதியும் வழியொடு தனதனும்
மகிழ்ந்து மிகவே புழ்ந்த தொருபால்

வயிரவ ரொடுபடர் உவணரும் உரகரும்
வரங்கள் பெறவே இரங்க ஒருபால்

இருடிகள் எவர்களும் இனியகி னரர்களும்
இணங்கி எதிரே வணங்க ஒருபால்

இபமுக வனும்எழில் இளவல்கள் அனைவரும்
இயன்ற நெறியே முயன்ற தொருபால்

உருமலி குறளின மொடுவசு முசுமுகன்
உறைந்து பரிவாய் நிறைந்த தொருபால்

உடுவொடு நடவுப னிருவரு முறைமுறை
உகந்து தொழவே மிகுந்த தொருபால்

அடல்விடை முகன்அறை கதையுற வெகுசனம்
அதுங்கி அருகே ஒதுங்க ஒருபால்

அயன்முடி திருகிய வயவனு நியமமொ
டடங்கி வலமே தொடங்க ஒருபால்

மடல்புனை புகரொடு வருபதி னொருவரும்
மருங்கின் உறவே நெருங்க ஒருபால்

மருவொடு துவர்இரு வருமிசை வலமொடு
வசிந்து மனமே கசிந்த தொருபால்

மிடலிறை விறலரி விமலர்கள் அருள்சுதன்
வியந்து விரைவாய் நயந்த தொருபால்

வெயில்விரி சுடரவன் மகனொடு மதிமகன்
விளம்பு முறையே கிளம்ப ஒருபால்

உடலொளி மவுனிகள் உடன்உப னிடதரும்
உளங் குளிரவே விளங்க ஒருபால்

உமைதிரு மகள்நில மகள்கலை மகளொடும்
உகந்தெ வருமே தொகுந்த தொருபால்

அதிபகி ரதிபயி ரவிபக வதிசசி
யரம்பை யருமே நிரம்ப ஒருபால்

அழகிய கவுரியொ டிலகிய வலவையும்
அடைந்து தயவாய் மிடைந்த தொருபால்

மதியர சருநிறை வசியரும் வினைஞரும்
மலிந்து முகமே பொலிந்த தொருபால்

வருசிவன் அடியவர் அரகர எனமுறை
வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்

விதிமுறை கருதியை வகைபுரி கருவிகள்
விளைந்த ஒலிவான் அலைந்த தொருபால்

விதமுடன் அபிநய வனிதையர் சதிமுறை
விரிந்த நடமே புரிந்த தொருபால்

உதிர்தரு மலர்விரை யுறுபுகை ம்ருகமதம்
உமிழ்ந்த மணமே கமழ்ந்த தொருபால்

ஒழுகிய கிரிதொடு பணிதம தடுசுடர்
உவந்த ஒளியே நிவந்த தொருபால்

அரியக டெனமுக டளவிய ஒருகுடை
அமர்ந்த நிழலே சமைந்த தொருபால்

அருமட அனமென இருபுடை கவரிகள்
அசைந்த அழகே யிசைந்த தொருபால்

வரிசைசெய் துயலொடு வனமயில் சிவிறியின்
வயங்கு சிறுகால் இயங்க ஒருபால்

மறுகட லினில்எழு நிறைமதி அமுதென
வரிந்து பனிநீர் சொரிந்த தொருபால்

விரியிருள் வலிதரு கிரணம தெனநல
மிகுஞ்சு ழலில்வீ சுகுஞ்ச மொருபால்

வியன்மர கதமணி மிளிர்தரு களசெதிர்
விரைந்து நிரையாய் நிரைந்த தொருபால்

உரியவெ ளிலையுடன் உயரிய கமுகினில்
உகுந்த கனியே பகுந்த தொருபால்

உலகுள வனிதையர் அவரவர் விரதமொ
டுணர்ந்து கனியே கொணர்ந்த தொருபால்

முருகவேளின் திருக்கோல வர்ணணை - கேசாதி பாதம்

அறுகதி ரவரென அறுமணி மவுலிகள்
அடர்ந்து வெயிலே படர்ந்த தொருபால்

அறுமதி எனஅறு திருமுக சததள
அலர்ந்த மலரே மலர்ந்த தொருபால்

மறுவறு கடலென மருவுப னிருவிழி
வழிந்த அருளே பொழிந்த தொருபால்

வனைதரு மகரமு மணியணி பணிகளும்
வயங்கு குழையே தயங்க ஒருபால்

இறுகுபொன் மலையொடும் இடறுப னிருபுயம்
இசைந்து நெடுவான் அசைந்த தொருபால்

எழிலியை அனையப னிருகையில் அயில்முதல்
இலங்கு படையே துலங்க ஒருபால்

உறுவரை யருவியை நிகர்தரும் உரமிசை
யுடன் கொள் புரிநூல் கிடந்த தொருபால்

உருமென இகலிமுன் எதிர்பொரும் அவுணருள்
உடைந்த உடைவாள் சிறந்த தொருபால்

அநவர தமுமறை முறையிடு பரிபுரம்
அலங்கும் இருதாள் குலுங்க ஒருபால்

தேவியர்

அளவறு கலவியின் முழுகிய குறமகள்
அமர்ந்துள் ஒயிலாய் நிமிர்ந்த தொருபால்

வனதரு வினிலுறை சதமகன் அருள்மகள்
வதிந்து மணமே பொதிந்த தொருபால்

அடியார்கள்

வருமடி யவரிடம் வலியச நதம்வர
வளர்ந்த சபையே கிளர்ந்த தொருபால்

நினைவொடு பணிபவர் வினைதுகள் படஎதிர்
நினைந்து திருநீ றணிந்த தொருபால்

நிறைமல ரொடுநல கலவையும் உயர்குரு
நினைந்து தரவே புனைந்த தொருபால்

தினகரன் உலவுச நிதியினில் இரவலர்
தெளிந்த தமிழே பொழிந்த தொருபால்

சிவபர கிரியினில் ஒருசிவன் வடிவொடு
திருந்த முருகோன் இருந்த கொலுவே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தானனா தத்ததன தானனா தத்ததன
       தானனா தத்ததன            தந்ததாத் தனனா

பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு
       பூவில்யா வர்க்கும்வரு            துன்புதீர்த் திடுமே

பூதசே னைக்குள்ஒரு கோடிசூர் யப்பிரபை
       போலமா யக்கரிய            கங்குல்நீக் கிடுமே

பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு
       போர்வைபோல் நெட்டுறைம            ருங்குசேர்த் திடுமே

போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ்
       பூசைநே சித்துமலர்            தும்பைசாத் திடுமே

பாவ்ரு பக்கொடிய சூரனார் பெற்றபல
       பாலர்மா ளத்தசைகள்            உண்டுதேக் கிடுமே

பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி
       பாயவே வெட்டியிரு            துண்டமாக் கிடமே

பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி
       பாறுபேய் துய்த்திடநி            ணங்களுட் டிடுமே

பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக
       பாலிசூ லப்படையை            வென்றுதாக் கிடுமே

ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக
       ளாமகோ ரக்களைக            ளைந்துநீக் கிடுமே

யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ
       ராமலே சுற்றிலும்இ            ருந்துகாத் திடுமே

ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல்
       ஆணையா வைத்துவலம்            வந்துபோற் றிடுமே

ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும
       றாதபா சத்தையும்அ            ரிந்துபோட் டிடுமே

மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு
       மேருவாம் விற்பரமர்            தந்தபாக் கியவான்

வேடர்மா னுக்குமுயர் தேவயா னைக்கும்இசை
       வேலர்தா ளைத்தொழுது            யர்ந்தவாழ்க் கையினான்

வீறுசேர் மிக்ககண நாதனார் எட்டுவகை
       வீரர்நே யத்தமையன்            என்றதோட் டுணைவோன்

மேன்மையாம் லக்ஷரத வீரர்பூ சிக்கவரு
       வீரவா குத்தலைவன்            வென்றவாட் படையே.

தானனா தத்ததன தானனா தத்ததன
தானனா தத்ததன தந்ததாத் தனனா

பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு
பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே

பூதசே னைக்குள் ஒரு கோடிசூர்
யப்பிரபை போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே

பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு
போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே

போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ்
பூசைநே சித்துமலர் தும்பைசாத் திடுமே

பாவரூ பக்கொடிய சூரனார் பெற்றபல
பாலர்மா ளத்தசைகள் உண்டுதேக் கிடுமே

பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி
பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடமே

பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி
பாறுபேய் துய்த்திடநி ணங்களுட் டிடுமே

பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக
பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே

ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக
ளாமகோ ரக்களைக ளைந்துநீக் கிடுமே

யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ
ராமலே சுற்றிலும்இ ருந்துகாத் திடுமே

ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல்
ஆணையா வைத்துவலம் வந்துபோற் றிடுமே

ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும
றாதபா சத்தையும்அ ரிந்துபோட் டிடுமே

மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு
மேருவாம் விற்பரமர் தந்தபாக் கியவான்

வேடர்மா னுக்குமுயர் தேவயா னைக்கும்இசை
வேலர்தா ளைத்தொழுது யர்ந்தவாழ்க் கையினான்

வீறுசேர் மிக்ககண நாதனார் எட்டுவகை
வீரர்நே யத்தமையன் என்றதோட் டுணைவோன்

மேன்மையாம் லக்ஷரத வீரர்பூ சிக்கவரு
வீரவா குத்தலைவன் வென்றவாட் படையே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த             தனதானனா

மெத்த மெத்த அக்ர மத்தின்
மெத்த மெத்த விக்ர மத்தின்
மெத்த மெத்த உக்ர வெற்றி            மிகுபாசமே

விட்டு விட்டு றுக்கு றுக்கு
கட்டு கட்டு குத்து குத்து
வெட்டு வெட்டெ னச்சி னத்து            நமனாடியே

சத்த மிட்ட தட்டி நெட்டெ
யிற்றி னைக்க டித்து றுக்கு
தர்க்க மிட்டெ னைப்பி டிக்க            வருபோதிலே

தத்த ளிக்கு புத்தி யைத்தி
டப்ப டுத்தி யொத்தி டத்த
ணிப்பு றுத்தி மெய்த்து ணைக்கு            வரவேணுமே

எத்த லத்து மெப்ப திக்கும்
எப்ப டிக்கும் எச்ச ரித்து
நற்ப தத்தை யுச்ச ரிக்கும்            நினைவாகியே

இட்டம் வைத்த வர்க்க நுக்ர
கச்ச முத்ர வித்தை யிற்ப்ர
சித்த நித்ய முத்த மிழ்க்கும்            அருள்போதனே

அத்ர பத்ர சித்ர மிட்ட
யிற்ப டைத்த யிற்கி ணைத்த
லர்க்க ணுற்ற பொற்கு றத்தி            மணவாளனே

அத்த னுக்கு மைக்கி தத்த
புத்ர சித்தி முத்தி யைச்செ
யற்பு தச்சி வக்கி ரிக்குள்            முருகேசனே.

தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த தனதானனா

மெத்த மெத்த அக்ர மத்தின்
மெத்த மெத்த விக்ர மத்தின்
மெத்த மெத்த உக்ர வெற்றி மிகுபாசமே

விட்டு விட்டு றுக்கு றுக்கு
கட்டு கட்டு குத்து குத்து
வெட்டு வெட்டெ னச்சி னத்து நமனாடியே

சத்த மிட்ட தட்டி நெட்டெ
யிற்றி னைக்க டித்து றுக்கு
தர்க்க மிட்டெ னைப்பி டிக்க வருபோதிலே

தத்த ளிக்கு புத்தி யைத்தி
டப்ப டுத்தி யொத்தி டத்த
ணிப்பு றுத்தி மெய்த்து ணைக்கு வரவேணுமே

எத்த லத்து மெப்ப திக்கும்
எப்ப டிக்கும் எச்ச ரித்து
நற்ப தத்தை யுச்ச ரிக்கும் நினைவாகியே

இட்டம் வைத்த வர்க்க நுக்ர
கச்ச முத்ர வித்தை யிற்ப்ர
சித்த நித்ய முத்த மிழ்க்கும் அருள்போதனே

அத்ர பத்ர சித்ர மிட்ட
யிற்ப டைத்த யிற்கி ணைத்த
லர்க்க ணுற்ற பொற்கு றத்தி மணவாளனே

அத்த னுக்கு மைக்கி தத்த
புத்ர சித்தி முத்தி யைச்செ
யற்பு தச்சி வக்கி ரிக்குள் முருகேசனே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
        தந்த தந்த தந்த தந்த           தனதானனா


சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து
        சங்க மங்க லம்பொ ருந்து            தமிழ்பாடியே

தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர்
        தங்கண் முன்பு நின்று நின்று           மெலிவோ தியே

சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி யங்கி
        சிந்தி யிந்த வெங்கு டம்பை           அழிபோதுமா

சிங்க முன்பு குந்த தந்தி யின்கு லங்க லங்கு பண்பொ
        சிந்த துன்ப மென்றொ ழிந்து            கரையேறுவேன்

அந்த ரங்கள் அண்டர் அண்டம் மண்ட லங்கு லுங்க நின்ற
        சைந்த சைந்து பந்தெ ழும்ப            அசுராதியோர்

அங்க டங்கள் துண்ட துண்ட கண்ட பந்தி கண்டை வந்த
        லைந்து ருண்டு மண்டை சிந்த            அடர்கோபனே

கந்த சந்த நுங்கு கும்ப கொங்கை யிந்தி ரன்ம டந்தை
        கங்க ணம்பு ரந்த வென்றி            அணிநேயனே

கம்பு மஞ்ச முந்தி கழ்ந்தி ருந்தி டுந்தி றஞ்செ றிந்து
        கஞ்ச நன்ற லர்ந்த செந்தின்            முருகேசனே.

தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த தனதானனா


சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து
சங்க மங்க லம்பொ ருந்து தமிழ்பாடியே

தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர்
தங்கண் முன்பு நின்று நின்று மெலிவோ தியே

சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி யங்கி
சிந்தி யிந்த வெங்கு டம்பை அழிபோதுமா

சிங்க முன்பு குந்த தந்தி யின்கு லங்க லங்கு பண்பொ
சிந்த துன்ப மென்றொ ழிந்து கரையேறுவேன்

அந்த ரங்கள் அண்டர் அண்டம் மண்ட லங்கு லுங்க நின்ற
சைந்த சைந்து பந்தெ ழும்ப அசுராதியோர்

அங்க டங்கள் துண்ட துண்ட கண்ட பந்தி கண்டை வந்த
லைந்து ருண்டு மண்டை சிந்த அடர்கோபனே

கந்த சந்த நுங்கு கும்ப கொங்கை யிந்தி ரன்ம டந்தை
கங்க ணம்பு ரந்த வென்றி அணிநேயனே

கம்பு மஞ்ச முந்தி கழ்ந்தி ருந்தி டுந்தி றஞ்செ றிந்து
கஞ்ச நன்ற லர்ந்த செந்தின் முருகேசனே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தனதானனா

எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும்
எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும்
எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே

          எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத
          எந்தஇட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும்
          எந்தமொழி யுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே

வந்தனைசெய் துன்சரண நம்புதல்பு ரிந்தஅருள்
வந்தநுதி னந்தனிலும் நெஞ்சில்நினை வின்படிவ
ரந்தரஉ வந்தருள்இ தம்பெறுவ தன்றிநெடு வலைவீசியே

          வஞ்சவிழி சண்டன்உறு கின்றபொழு துங்குமர
          கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ
          ருந்துபய முந்தனிமை யுந்தவிர அஞ்சலென வரவேணுமே

தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி
குண்டமட குண்டமட மண்டமென நின்றுமுர
சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே

          தண்டஅமர் மண்டசுரர் மண்டைநிண மென்றலகை
          யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன்வ ணங்குபத
          தண்டைசிறு கிங்கிணிப லம்பிடவ ரும்பவனி மயில்வாகனா

செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை
சந்தனவ னங்குலவு மந்திகுதி கொண்டயல்செ
றிந்தகமு கின்புடைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே

          சிந்தியஅ ரம்பைபல வின்கனியில் வந்துவிழ
          மென்கனியு டைந்தசுளை விண்டநறை கொண்டுசிறு
          செண்பகவ னங்கள்வளர் தென்பழநி யம்பதியின் முருகேசனே.

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தனதானனா

எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும்
எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும்
எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே

எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத
எந்தஇட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும்
எந்தமொழி யுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே

வந்தனைசெய் துன்சரண நம்புதல்பு ரிந்தஅருள்
வந்தநுதி னந்தனிலும் நெஞ்சில்நினை வின்படிவ
ரந்தரஉ வந்தருள்இ தம்பெறுவ தன்றிநெடு வலைவீசியே

வஞ்சவிழி சண்டன்உறு கின்றபொழு துங்குமர
கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ
ருந்துபய முந்தனிமை யுந்தவிர அஞ்சலென வரவேணுமே

தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி
குண்டமட குண்டமட மண்டமென நின்றுமுர
சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே

தண்டஅமர் மண்டசுரர் மண்டைநிண மென்றலகை
யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன்வ ணங்குபத
தண்டைசிறு கிங்கிணிப லம்பிடவ ரும்பவனி மயில்வாகனா

செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை
சந்தனவ னங்குலவு மந்திகுதி கொண்டயல்செ
றிந்தகமு கின்புடைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே

சிந்தியஅ ரம்பைபல வின்கனியில் வந்துவிழ
மென்கனியு டைந்தசுளை விண்டநறை கொண்டுசிறு
செண்பகவ னங்கள்வளர் தென்பழநி யம்பதியின் முருகேசனே.

சுருக்கவுரை
பொழிப்புரை

தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன தனதானனா

சாதியுங்குலம் ஆவதுங்குடி ஆவதுஞ்சனம் ஆவதுங்கிளை
தாரமுந்திர பாலரும்பிர தானமும்பெரு காண்மையும்பெறு
தானமும்பகு மானமுஞ்சிவ ஞானமும்பல கோலமும்புரி தொழிலோடுமெ

          தாழ்வகன்றிடு வாழ்வும்வெம்பிணி நோயும்அங்கதி லாதுரந்தனி
          லாவதுந்தளர் சாவொழிந்திடு யோகமுஞ்சிவ பேறும் எந்தநி
          தானமுஞ்செய்த ராசுகண்டது போல்வரும்பொது வாகுமென்றுன திருதாளையே

ஓதினெஞ்சய ரார்தினந்திரி காலமுந்தொழு வோர்விரும்பிய
தேதும் அன்புட னேதருங்க்ருபை யாகவந்தநு பூதிதந்துமு
னூல்கடந்திட வேபுரந்தருள் கூரும்இங்கித சேவைநம்பிய படிகாணவே

          ஓகைவந்தனை யாய்வணங்கிய ஏழைசிந்தையு ளேநினைந்திடு
          வேளைவந்தினி தாய்வரந்தர வேணுமென்றக மேவருந்தியும்
          ஓதினன்தினம் நான்விளம்புதல் நீஅறிந்தும் இதேன்இரங்கிலை யறிவேன்ஐயா

ஆதியந்தம னாதிவிந்துவு நாதமும்பிரி யாநிறைந்தவ
ருபஇன்பசொ ரூபசுந்தர சோதிமின்பொலி நீதியம்பொரு
ளாகநின்றப ராபரன்கரு ணாலயன்புல வோர்இறைஞ்சிட எதிர்காளிவா

          தாடலின்செக சேகிணங்கிண சேகுடண்டம டாடமண்டம
          தாகிணங்கிண தோதிணங்கின தாதிமிந்திமி தோஎனுந்தொனி
          யார்சிலம்பொலி தாளமிஞ்சிட வேநடம்புரி பாதநம்பரன் அருள்பாலனே

மாதிரந்திசை யாகவந்திக டாசலந்திரை மாசலம்புவி
மாகமண்டக டாகமும்பொனின் மேருவின்தலை யேகுலுங்கிட
வாசமொன்றிய கால்பொருந்துகள் வான்நிரம்பிட வேவருங்கதிர் வடிவேலனே

          வானரங்கதிர் தாவுதண்டலை மேவுகொண்டலை யூடுநின்றலை
          மாஇனங்களி கூஇரூநண்பொடு கோகநஞ்செறி வாவிசிந்திய
          பால்அருந்திய பேர்சிறந்திரு மூவர்விஞ்சையர் சூழ்பரங்கிரி முருகேசனே.

தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன தனதானனா

சாதியுங்குலம் ஆவதுங்குடி ஆவதுஞ்சனம் ஆவதுங்கிளை
தாரமுந்திர பாலரும்பிர தானமும்பெரு காண்மையும்பெறு
தானமும்பகு மானமுஞ்சிவ ஞானமும்பல கோலமும்புரி தொழிலோடுமெ

தாழ்வகன்றிடு வாழ்வும்வெம்பிணி நோயும்அங்கதி லாதுரந்தனி
லாவதுந்தளர் சாவொழிந்திடு யோகமுஞ்சிவ பேறும் எந்தநி
தானமுஞ்செய்த ராசுகண்டது போல்வரும்பொது வாகுமென்றுன திருதாளையே

ஓதினெஞ்சய ரார்தினந்திரி காலமுந்தொழு வோர்விரும்பிய
தேதும் அன்புட னேதருங்க்ருபை யாகவந்தநு பூதிதந்துமு
னூல்கடந்திட வேபுரந்தருள் கூரும்இங்கித சேவைநம்பிய படிகாணவே

ஓகைவந்தனை யாய்வணங்கிய ஏழைசிந்தையு ளேநினைந்திடு
வேளைவந்தினி தாய்வரந்தர வேணுமென்றக மேவருந்தியும்
ஓதினன்தினம் நான்விளம்புதல் நீஅறிந்தும் இதேன்இரங்கிலை யறிவேன்ஐயா

ஆதியந்தம னாதிவிந்துவு நாதமும்பிரி யாநிறைந்தவ
ருபஇன்பசொ ரூபசுந்தர சோதிமின்பொலி நீதியம்பொரு
ளாகநின்றப ராபரன்கரு ணாலயன்புல வோர்இறைஞ்சிட எதிர்காளிவா

தாடலின்செக சேகிணங்கிண சேகுடண்டம டாடமண்டம
தாகிணங்கிண தோதிணங்கின தாதிமிந்திமி தோஎனுந்தொனி
யார்சிலம்பொலி தாளமிஞ்சிட வேநடம்புரி பாதநம்பரன் அருள்பாலனே

மாதிரந்திசை யாகவந்திக டாசலந்திரை மாசலம்புவி
மாகமண்டக டாகமும்பொனின் மேருவின்தலை யேகுலுங்கிட
வாசமொன்றிய கால்பொருந்துகள் வான்நிரம்பிட வேவருங்கதிர் வடிவேலனே

வானரங்கதிர் தாவுதண்டலை மேவுகொண்டலை யூடுநின்றலை
மாஇனங்களி கூஇரூநண்பொடு கோகநஞ்செறி வாவிசிந்திய
பால்அருந்திய பேர்சிறந்திரு மூவர்விஞ்சையர் சூழ்பரங்கிரி முருகேசனே.

சுருக்கவுரை
பொழிப்புரை
1. சீர்பாத வகுப்பு
2. தேவேந்திர சங்க வகுப்பு
3. வேல் வகுப்பு
4. திருவேளைக்காரன் வகுப்பு
5. பெருத்த வசன வகுப்பு
6. பூத வேதாள வகுப்பு
7. பொருகளத் தலகை வகுப்பு
8. செருக்களத் தலகை வகுப்பு
9. போர்க்களத் தலகை வகுப்பு
10. திருஞான வேழ வகுப்பு
11. திருக்கையில் வழக்க வகுப்பு
12. வேடிச்சி காவலன் வகுப்பு
13. சேவகன் வகுப்பு
14. வேல்வாங்கு வகுப்பு
15. புய வகுப்பு
16. சித்து வகுப்பு
17. கடைக்கணியல் வகுப்பு
18. சிவலோக வகுப்பு
19. மயில் வகுப்பு
20. கொலு வகுப்பு
21. வீரவாள் வகுப்பு
22. சிவகிரி வகுப்பு
23. திருச்செந்தில் வகுப்பு
24. திருப்பழநி வகுப்பு
25. திருப்பரங்கிரி வகுப்பு